CLEAN INDIA

Launch 

1st - 31st October 2021

Launch of Clean India Program at Ramanathapuram District by Assistant Director, Panchayat, Ramanathapuram. Launch event was attended by Swach Bharat Coordinator, DRDA, Ramanathapuram and DIP, Department of Education, Ramanathapuram. NSS Program Officer and SDAT coaches.

Collection of waste near the launch area collected by Members of Nicholas Martial Arts Academy, affiliated to NYK Ramanthapuram and NSS Volunteers. 

#NYK &  NSS Ramanthapuram #Clean India


  




     


 

 


                                 

DAY - 2
 
02-10-2021


 
 



8-10-2021


செய்யது அம்மாள்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 40 மாணவர்கள் தத்தெடுத்த கிராமமான பழனிவலசை கிராமத்தில் உள்ள கடற்கரையில் மக்காத குப்பைகளை அகற்றினர். இதில் மாணவர்கள் எட்டு குழுக்களாக பிரிந்து சுமார் 5 கிலோ மீட்டர்  தூரம் உள்ள குப்பைகளை  சேகரித்தனர். இதில் 80 கிலோ அளவிலான மக்காத குப்பைகளை சேகரித்து சுகாதார பணியாளரிடம் ஒப்படைத்தனர்.









 


10-10-2021

செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா ராமநாதபுரம் இணைந்து ராமேஸ்வரம் ஏறகாடு என்ற கிராமத்தில் மக்காத குப்பைகளை அகற்றும் பணி துவங்கியது. அதனைத் தொடர்ந்து அக்கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தூய்மை இந்தியா, கொரனா விழிப்புணர்வு மற்றும் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ராமநாதபுரம் சப்-கலெக்டர் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



 

 

  

 

 

12-10-2021


செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா ராமநாதபுரம் இணைந்து இன்று 12.10.2021 செவ்வாய்க்கிழமை காலை 10:30மணி  அளவில் *தூய்மை இந்தியா நிகழ்ச்சி அரியமான் கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), திருமதி. செல்லம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), திரு. சண்முகநாதன், தூய்மை பாரதம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திரு. நவநீதகிருஷ்ணன், நேரு யுவகேந்திரா இராமநாதபுரம் மாவட்ட இளையோர் அலுவலர்,  திரு. A.நோமான் அக்ரம், திரு. A. வள்ளி  விநாயகம், நாட்டு நலபணிதிட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முகம் அலுவலர், சாத்தகோன் வலசை தலைவர்  மற்றும் மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 
இந்த நிகழ்ச்சியில் இராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவர்கள் மற்றும் நேரு யுவகேந்திரா மன்றங்கள் கலந்து கொண்டு அரியமான் கடற்கரையில் தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  இறுதியில் தூய்மை  உறுதிமொழி  எடுக்கப்பட்டது. 


 

 

 


























 

.